Last Updated:
சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 200க்கும் மேற்பட்டோரை மீண்டும் இந்தியாவுக்கே நாடுகடத்தும் பணிகளை தொடங்கியுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 200க்கும் மேற்பட்டோரை மீண்டும் இந்தியாவுக்கே நாடு கடத்தும் பணிகளை தொடங்கியுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்றப்போவதாக அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 5,000 பேரை கண்டுபிடித்த அதிகாரிகள் அவர்களை தங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கே நாடு கடத்தும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
Also Read: Trump: கனடா, மெக்சிக்கோ நாட்டு பொருட்கள் மீது 25% வரி.. முடிவை தற்காலிகமாக நிறுத்திய டிரம்ப்..!
சி-17 ரக அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 18,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
February 04, 2025 2:50 PM IST