கோலாலம்பூர்:
பழைய கிள்ளான் சாலைக்கு அருகில் உள்ள ஸ்காட் கார்டன் அருகே நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், 16 குடிசை வீடுகள் தீயில் எரிந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
நேற்று(மார்ச் 3) அதிகாலை 4.57 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி அம்டான் மஹத் தெரிவித்தார்.
“எட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 46 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும், அவர்கள் அங்கு வந்தபோது, 16 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. வீடுகள் அருகாமையில் இருந்ததால் தீயை அணைப்பது கடினமாக இருந்தது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காலை 6.05 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், இருப்பினும், 60 வயதுக்குட்பட்ட இருவர் தீயில் கொல்லப்பட்டனர்.
மேலும் அங்கிருந்த 12 வீடுகள் முழுமையாக எரிந்தன, மற்ற நான்கு வீடுகள் 50% எரிந்தன. தீ ஏற்பட்டதற்கான காரணத்தை நாங்கள் இன்னும் ஆராய்ந்து வருகிறோம்,” என்று அவர் அவ்வறிக்கையில் கூறினார்.