மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், 195 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் பட்டியல் எதுவும் வெளியாகாத நிலையில், இன்று அக்கட்சியின் தேர்தல் குழு மாலை 6 மணிக்கு கூடுகிறது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் இறுதி செய்யப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு கூட்டம் நிறைவடைந்த உடன், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும், அமேதியில் ராகுல் காந்தியும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கூட்டணிக்கு எந்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்று எதுவும் இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று மயிலாடுதுறையில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மூன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை, திமுகவுடன் உண்மையான தோழமையுடன் உள்ளோம். அதிக இடங்களை ஒதுக்கினாலும், அதிமுக கூட்டணிக்கு செல்லமாட்டோம் என்று தெரிவித்தார்.
மேலும், தங்களுக்கு தொகுதிகளோ, எண்ணிக்கையோ பொருட்டல்ல, பாசிச சக்தி பாஜகவை வீழ்த்துவதே நோக்கம் என்று கூறிய அவர், தமிழகத்தில் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே பாஜக பெறும் என்றார்.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு ரூ.37,000 கோடி நிவாரண உதவி கேட்ட நிலையில் பாரத பிரதமர் ஒரு பைசாகூட நிதி ஒதுக்கவில்லை. ராமரை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற மோடியின் எண்ணம் நிறைவேறாது என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…