அமெரிக்காவில் இந்தியர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் கொல்லப்படும் சம்பவங்கள், தொடர்கதையாகயிருக்கின்றன. பெரும்பாலும், கல்லூரியில் படிப்பதற்காகச் செல்லும் மாணவர்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடனத்தில் MFA படித்துக் கொண்டிருந்தவர் அமர்நாத் கோஷ். கொல்கத்தாவைச் சேர்ந்த இவர், குச்சிப்புடி, பரதநாட்டியம் ஆகிய நடனக் கலைகளில் தேர்ந்தவர். சென்னையில் உள்ள கலாஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவர். மேலும், புகழ்பெற்ற நடனக் கலைஞர்களான போபிதா டே சர்க்கார், ஸ்ரீ எம்.வி.நரசிம்மாச்சாரி, பத்மஸ்ரீ அடையார் கே.லக்ஷ்மண் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர்.
இந்த நிலையில், இவர் அமெரிக்காவின் மிசோரியில் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபரால் பல முறை சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இது தொடர்பான தகவல்களைப் பதிவுசெய்த, அமர்நாத் கோஷின் தோழியும், தொலைக்காட்சி நடிகையுமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, “என் நண்பர் அமர்நாத் கோஷ் செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் அகாடமியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பெற்றோருக்கு இவர் ஒரே மகன்.