கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி அரசு கலைக்கல்லூரியில் ரூபாய் இரண்டு கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் ஆய்வகம் திறப்பு விழா காணொளி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.நிகழ்வில் கலைக் கல்லூரியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னதுரை அவர்களும்,மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. செல்வி அவர்களும் மற்றும் கல்லூரி முதல்வர் பொறுப்பு சுலோச்சனா அவர்களும் ,மேனாள் கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி அவர்களும் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவிகள் பேராசிரிய பெருமக்கள்,பொதுமக்கள் பங்கேற்றனர்.