கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா பிரான்ஸில் நிறைவேற்றப்பட்டதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் 1975 ஆம் ஆண்டு முதல் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக உள்ளது. இந்நிலையில், கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக மாற்றும் வகையில் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவிற்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
பிரான்சில் கடந்த 1975ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் தான் 1958ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்நாட்டின் அரசியலமைப்பில் உள்ள, பெண்கள் சுதந்திரம் தொடர்பான பிரிவை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அதில், கருக்கலைப்பு மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்த நிலையில், நவீன பிரான்சின் அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 25 வது திருத்தம் இதுவாகும். 2008ம் ஆண்டிற்குப் பிறகு அந்நாட்டு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் முதல் திருத்தம் இதுவாகும். இந்த சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை பதிவு செய்த முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.
இதன்மூலம், குறைந்தபட்சம் முதல் 14 வார கர்ப்பகாலத்தில் அரசு நிதியுதவியுடன் கருக்கலைப்புகளை அனுமதிக்கிறது. பெற்றோரின் அனுமதியின்றி சிறார்களும் இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இணையத்தில் கருக்கலைப்பு எதிர்ப்பு பேச்சு தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு கருக்கலைப்பு பெண்களின் உரிமை என போராடும் ஒரு தரப்பினர் பேராதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாரீஸில் உள்ள ஈபிள் டவர் மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…