குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை உணர்த்தும், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னோடி திட்டமான போஷன் அபியான், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் போஷன் சே பதாய் தக் என புதிய அத்தியாயத்துக்கு வந்துள்ளது. இந்த முன்முயற்சியின் தொடக்க விழா நெட்வொர்க் 18 குழுமத்துடன் இணைந்து பிப்ரவரி 29,2024 அன்று நடைபெற்றது.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்கான இந்தியாவின் பயணத்தில், கதை சொல்லல் மூலம் குழந்தைகளை மேம்படுத்தும் இந்த திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல் ஆகும்.
2018 ஆம் ஆண்டில் நமது பிரதமரால் தொடங்கப்பட்ட போஷன் அபியான் திட்டம் மூலம் குடிமக்களின் குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான ஒரு புதிய பயணத்தை இந்தியா தொடங்கியது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தலைமையிலான இந்த முன்னோடி திட்டம் ஆரோக்கியமான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைவு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது.
போஷன் அபியான் திட்டம் தற்போது போஷன் சே பதாய் தக் மூலம் போஷன் அபியான் 2.0 என உருமாறியுள்ளது. ”போஷன் சே பதாய் தக் நயே பாரத் கி யுனாதி” என்ற கருப்பொருளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்முயற்சி குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடையாளப்படுத்துகிறது.
லட்சக்கணக்கான பள்ளிகளுக்கு சென்றடைந்து இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க இது வழி செய்கிறது.
போஷன் சே பதாய் தக் தொடக்க விழாவில் உரையாற்றிய அமைச்சர் ஸ்மிருதி ஜுபின் இரானி, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கான அரசின் முன் முயற்சிகள் மற்றும் முழுமையான அணுகுமுறைகளையும், ஊட்டச்சத்துக் குறைபாட்டை குறைத்து, ஆரோக்கியமான மக்கள்தொகையை வளர்ப்பதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் எடுத்துரைத்தார். கடந்த ஆறு வருடங்களில் அங்கன்வாடிகள் சாக்சம் அங்கன்வாடிகளாக மாறி இருப்பதை எடுத்துரைத்தார்.
ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் அரசு, யூனிசெப் மற்றும் பிற பங்குதாரர்களின் கூட்டு முயற்சிகளை விவரித்தார். உடல் பருமனை எதிர்த்து போராடுவது மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை ஊக்குவிப்பது குறித்த கலந்துரையாடல்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டின.
இந்த முன் முயற்சிக்கு தனது உறுதியான அர்ப்பணிப்பை பகிர்ந்து கொண்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ஜுபின் இரானி, “போஷன் சே பதாய் தக் திட்டத்தின் மூலம் ,நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முதலீடு செய்வது என்பது நமது நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் செய்யும் முதலீடு என்பதை நினைவில் கொள்வோம். கல்வி அதிகாரம் அளித்தல் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் திறனையும் வளர்ப்பதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் பிரகாசமான, ஆரோக்கியமான இந்தியாவுக்கான பாதையை நாங்கள் வகிக்கிறோம்.
ஆரோக்கியமான மற்றும் வளமான நாளைய எதிர்காலத்தை நோக்கிச் செல்ல எந்த ஒரு குழந்தையையும் நாம் இதில் தவற விட்டு விடக் கூடாது. நாம் அனைவரும் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த பயணத்தை மேற்கொள்வோம்” என்றார். பெருந்தொற்று காலத்தின் போது இந்தியாவில் ஊட்டச்சத்தை பராமரிக்க உதவியதற்கு பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணை தலைவரான பில் கேட்ஸ் கலந்து கொண்டு தனது கருத்துகளை பகிர்ந்தார். மேலும் போஷன் உத்சவ் புத்தகம் மற்றும் தகவல் , கல்வி மற்றும் தொடர்பு ஆகியவற்றுக்கான IEC கருவிகளையும் வெளியிட்டார்.
பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களில் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக உள்ளூர் பழக்க வழக்கங்களை இணைக்கும் இந்தியாவின் போஷன் முயற்சியை பில் கேட்ஸ் மிகுந்த உற்சாகத்துடன் பாராட்டினார் . ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், குழந்தை பராமரிப்பை விரிவுபடுத்துதல் மற்றும் பெண்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளித்தல் ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றங்களுக்கும் அமைச்சரை பாராட்டினார். தடுப்பூசிகள் மற்றும் துணைப் பொருட்கள் கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னிலை வகிப்பதை குறிப்பிட்ட அவர் ஊட்டச்சத்து துறையிலும் முன்னேற்றம் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த முன்னேற்றங்கள் இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கங்கள் என்னென்ன என்பதை எடுத்துரைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
போஷன் சே பதாய் தக் திட்டத்தின் மீடியா பார்ட்னராக இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த நெட்வொர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட் எம்டி & எடிட்டர், ராகுல் ஜோஷி,” போஷன் சே பதாய் தக் திட்டதின் மீடியா பார்ட்னராக இருப்பதில் பெருமைப்படுகிறோம். நெட்வொர்க்18 குழுமம், நாடு முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் ஆழமான தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. எங்கள் கூட்டு முயற்சி மூலம் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிப்பதையும், ஒவ்வொரு குழந்தைக்கும் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் ஆரோக்கியமான பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நாம் ஒன்றிணைந்து பயணிக்கலாம்” என தெரிவித்தார்.
போஷன் சே பதாய் தக் திட்டத்தின் மையப்பகுதி கார்ட்டூன் கதாபாத்திரங்களின் கூட்டணி ஆகும். சீசேம் ஸ்டிரீட், டைமண்ட் காமிக்ஸ் மற்றும் அமர் சித்ர கதா ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் சீசேம் ஸ்ட்ரீட் , டைமண்ட் காமிக்ஸ் மற்றும் அமர்சித்ர கதா ஆகியவற்றில் இருக்கும் பிரபல கதாபாத்திரங்களான மோட்டு பட்லு, சர்ச்சா சவுத்ரி, சாம்பு சுபாண்டி , சம்கி& எல்மோ ஆகியவை ஒரே தளத்தில் இணைந்து ஊட்டச்சத்துக் குறித்த பரப்புரையை மேற்கொள்ள இருக்கின்றன. தொடக்க விழாவில் இந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களின் கூட்டணி அறிமுகம் செய்யப்பட்டது. இவை இனி ஊட்டச்சத்துக்கான தூதர்களாக குழந்தைகளை கவரும். கதை சொல்லல் எனும் சிறந்த ஊடகம் மூலம் இந்த முயற்சி குழந்தைகளின் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் தூண்டுவதோடு அவர்களை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய மற்றும் நல்வாழ்வை நோக்கிய பாதையில் கொண்டு செல்லும்.
இதையும் வாசிக்க:
முழுமையான குழந்தை மேம்பாட்டில் தொடர்ச்சியான கவனம் செலுத்தி எதிர்காலத்தை மறுவரையறை செய்யும் ’போஷன் சே பதாய் தக்’ திட்டம்
வண்ணமயமான விளக்கப்படங்கள் முதல் ஈர்க்கும் வகையிலான கதைகள் வரை கார்ட்டூன் கூட்டணி என்பது ஊட்டச்சத்து கல்வியை ஒரு வேடிக்கையான மற்றும் தொடர்புடைய முறையில் உயிர்பிக்க ஒரு சக்தி வாய்ந்த முயற்சியாகும். குழந்தைகளுக்கு கல்வி மற்றும் அதிகாரம் அளித்தல் ,ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்தல் போன்ற புதுமையான அணுகுமுறைகளை மேம்படுத்துவதன் மூலம்ஸ்மிருதி ஜுபின் இரானியின் குழந்தைகள் நலன் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. மதிப்பிற்குரிய பேச்சாளர்கள், ஈர்க்கும் விவாதங்கள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளார்ந்த பார்வைகளுடன் போஷன் சே பதாய் தக்கின் முன்முயற்சியானது அனைவருக்கும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்கான இந்தியாவின் பயணத்தில் ஒரு முக்கியமான பாதைக்கு உறுதியளித்துள்ளது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான இந்தியாவை உருவாக்க குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக போஷன் சே பதாய் தக் திட்டத்தில் சேர்ந்து, இந்தியாவின் ஊட்டச்சத்து புரட்சியில் ஒன்றாக பயணிக்கலாம் வாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…