சக்கர நாற்காலி வழங்க தாமதமானதால் 80 வயது பயணி உயிரிழந்தது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி வந்த முதிய தம்பதியினர் இரண்டு சக்கர நாற்காலிகளை ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் ஒரு சக்கர நாற்காலி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், மனைவிக்கு நாற்காலியைக் கொடுத்துவிட்டு, நடந்துச் சென்ற 80 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
‘இந்திய மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் 2024’- லிஷாவின் முக்கிய அறிவிப்பு!
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் சக்கர நாற்காலிகள் தேவைப்படும் பயணிகள் 33 நபர்கள் இருந்துள்ளதாகவும், 15 சக்கர நாற்காலிகள் மட்டுமே விமான நிலையத்தில் இருந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 30 லட்சம் அபராதம் விதித்துள்ள மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.