மக்களவைத் தேர்தல் தேதியை மார்ச் 14 அல்லது 15ல் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 17ஆவது மக்களவையின் ஆயுட்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்த மக்களவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், விருப்ப மனு தாக்கல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக 195 இடங்களுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுவிட்டது. இரண்டாம் கட்டமாக தமிழக வேட்பாளர் விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
திமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட நான்கு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்து ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் ஒப்பந்தம் இறுதியாகவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பாஜகவுக்கு தேசிய மலரான தாமரை சின்னமா? – உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
அதிமுகவை பொறுத்தவரை புதிய தமிழகம் கட்சியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்து கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதியை மார்ச் 14 அல்லது 15 ஆம் தேதி, தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைப் போன்று இம்முறையும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும் முதல்கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…