பிரதம மந்திரி தெருவோர வியாபாரி தற்சார்பு நிதியுதவித் திட்டம் என்ற கடன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை PM SVANidhi என்று குறிப்பிடுகின்றனர். தொழில் தொடங்குவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் மூலதன நிதியுதவி வழங்கப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்த நிலையில் இருந்தது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த தெருவோர வியாபாரிகளுக்கு உதவி செய்யும் பொருட்டு இந்தத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. நலிவடைந்த வியாபாரிகள் மீண்டும் தங்கள் வணிகத்தை தொடங்குவதற்கு இந்தத் திட்டம் உதவிகரமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.
தகுதி என்ன?
2020ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி அல்லது அதற்கு முந்தைய நிலவரப்படி தெருவோர வியாபாரம் செய்கின்ற எந்தவொரு வியாபாரியும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். அதற்கு கீழ்காணும் நிபந்தனைகள் தெரிவிக்கப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வழங்குகின்ற, தெருவோர வியாபாரி என்ற அடையாள அட்டை. தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டு, அதற்கான அங்கீகாரச் சான்று பெற்றும் அடையாள அட்டை கிடைக்கப் பெறாத வியாபாரிகள்.
கணக்கெடுப்பு பணியின்போது விடுபட்ட போன தெருவோர வியாபாரியாகவோ அல்லது கணக்கெடுப்பிற்கு பிறகு தொழில் தொடங்கிய தெருவோர வியாபாரியாகவோ இருந்தால் உள்ளாட்சி விற்பனைக் குழுவிடம் இருந்து பெறப்படும் பரிந்துரைக் கடிதம் இருந்தாலும் இதில் கடன் பெறலாம். நகர்ப்புறத்தை ஒட்டிய பகுதியைச் சேர்ந்தவராகவோ அல்லது கிராமப்புற பகுதியைச் சேர்ந்தவராகவோ இருந்தாலும் உள்ளாட்சி அமைப்பு சார்ந்த நகர்ப்புற வியாபாரக் குழுவின் பரிந்துரைக் கடிதம் இருந்தால் போதுமானது.
பிரதம மந்திரி தெருவோர வியாபாரி தற்சார்பு நிதியுதவித் திட்டத்தில் எவ்வளவு கடன் கிடைக்கும்
உத்தரவாதமற்ற வகையில் ஒரு வியாபாரி ரூ.50 ஆயிரம் வரையில் கடன் பெற முடியும். முதல் முறை விண்ணப்பம் செய்யும்போது ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும். அதை வெற்றிகரமான முறையில் திருப்பிச் செலுத்தினால் அடுத்த முறை ரூ.20 ஆயிரம் கடன் வழங்கப்படும். அதனையும் வெற்றிகரமாக திருப்பிச் செலுத்தினால் 3ஆம் முறையாக ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.
இதையும் படிங்க:
Bill Gates : நாக்பூரில் சாலையோரம் தேநீர் அருந்திய உலக பணக்காரர் பில்கேட்ஸ்…
உத்தரவாதம் தேவையில்லை
இந்தத் திட்டத்தில் கடன் பெறுவதற்கு எந்தவொரு உத்தரவாதமும் வழங்க வேண்டியதில்லை. தவணைத் தொகையை முறைப்படி திருப்பிச் செலுத்துகின்ற வியாபாரிகளுக்கு 7 சதவீதம் வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை இணைத்து அனைத்து வங்கிகளிலும் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…