• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஈ சாலா கப் நமதே – மிரட்டி விட்ட ஆர்சிபி மகளிர் அணி… மகுடம் சூடி அசத்தல்

GenevaTimes by GenevaTimes
March 18, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஈ சாலா கப் நமதே – மிரட்டி விட்ட ஆர்சிபி மகளிர் அணி… மகுடம் சூடி அசத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆடவர் அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு இணையாகத் தொடங்கப்பட்டது மகளிர் பிரீமியர் லீக் தொடர்.  ஐந்து அணிகளுடன் அதன் இரண்டாவது சீசன் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கிய நிலையில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள், டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் பெங்களூர் அணி வீராங்கனைகள் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால்  விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி ரன் சேர்க்க தடுமாறியது.

விளம்பரம்

தொடக்க வீராங்கனை ஷெஃபாலி வெர்மா மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 44 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.  18.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆன டெல்லி, 113 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதனையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. டெல்லி அணியும் அசத்தலாகப் பந்து வீசி பதிலடி கொடுத்தது. இதன் காரணமாக பெங்களூரு வீராங்கனைகள் நிதான அட்டத்தை வெளிப்படுத்தினர்.

பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 31 ரன்களும் ஷோஃபி டெவின் 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் எல்லிஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஷ் ஜோடி 3 பந்துகள் மீதம் இருக்கும் போதே அணியை வெற்றிப் பெற வைத்தனர். இதனால் பெங்களூர் அணி மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது.

விளம்பரம்

கேப்டன் மந்தனாவுக்கு, விராட் கோலி வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் 347 ரன்கள் குவித்த பெங்களூர் அணியின் எல்லிஸ் பெர்ரி, அதிக ரன் குவிப்புக்கான ஆரஞ்ச் கேப்-ஐ வென்றார். இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தியதுடன் ஒட்டுமொத்தமாக 13 விக்கெட் சாய்த்த, பெங்களூரு வீராங்கனை ஸ்ரேயங்கா படில், தொடரின் அதிக விக்கெட்டுக்கான பர்ப்பிள் கேப் வென்றார்.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் இன்று காலை விற்பனை : டிக்கெட் வாங்குவது எப்படி?

விளம்பரம்

ஆடவர் ஐபிஎல் போட்டிகளில் 16 முறை களம் கண்ட பெங்களூர் அணி விராட் கோலி, க்றிஸ் கெய்ல், ஏபி டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட எத்தனையோ பிரமாண்ட பேட்டிங் படையுடன் விளையாடிய போதும் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாத சோகம் தொடர்கிறது. இந்நிலையில் பெங்களூர் அணி, மந்தனா தலைமையில் மகளிர் பிரீமியர் லீக் வாயிலாக முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

A leopard that showed tendency was caught | போக்கு காட்டிய சிறுத்தை பிடிபட்டது

Next Post

உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா… அப்ப மத்திய அரசின் இந்த அசத்தல் திட்டம் பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Next Post
உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா… அப்ப மத்திய அரசின் இந்த அசத்தல் திட்டம் பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா... அப்ப மத்திய அரசின் இந்த அசத்தல் திட்டம் பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin