இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்துக்கு இரைப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்திய தினத்தன்று இரைப்பை புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பேட்டி ஒன்றில் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்திய அன்று புற்றுநோய்க்கான சில அறிகுறிகள் தென்பட்டன. அப்போது அதுபற்றி சரியாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்த முழு புரிதல் எனக்கு இல்லை.
மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி, ஸ்கேன் செய்தேன். ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்திய அன்று இரைப்பையில் புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி எனக்கு மட்டுமின்றி, எனது குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.