கண்டமனூர்: தேனி மாவட்டத்தில் பரவலாக இலவம் காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம், கும்பக் கரை, சோத்துப்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், போடி, முந்தல், குரங்கணி, சிறைக்காடு, வருசநாடு, வாலிப்பாறை, அரசரடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இலவம் மரங்கள் அதிகம் உள்ளன. கன்றுகளை நட்டு 3 ஆண்டு களில் பலன் தரும். பின்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் பூ பூத்து பிப்ரவரியில் இலவம் பிஞ்சுகளாக மாறுகின்றன. பின்பு காய்கள் திரட்சியாக மாறி ஏப்ரலில் இதன் பட்டைகள் காய்ந்து பஞ்சு எடுக்கும் பருவத்துக்கு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் இம்மரங் களில் பூக்கள் அதிக அளவில் பூத்தன. இவை பிஞ்சாக மாறி காய் பருவத்துக்கு வந்துள்ளன. தற்போது இலைகள் உதிர்ந்து மரங்களில் காய்கள் மட்டுமே கொத்து கொத்தாக காய்த்துள்ளன. கடந்த ஆண்டை விட அதிக அளவில் காய்பிடித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து முருக்கோடையைச் சேர்ந்த விவசாய தொழிலாளி ஜீவா கூறுகையில், கடந்த மாதம் பிஞ்சுகள் அதிக அளவில் இருந்தன. அவற்றை வவ்வால்களும், குரங்குகளும் அதிக அளவில் சேதப்படுத்தின. இதனால் காய் களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற இழப் புகள் ஏற்பட்டு வருகின்றன. மார்ச் கடைசியில் இருந்து இலவம் காய்களை பறிக்கும் பணி தொடங்கும். அதைத் தொடர்ந்து காய்களின் மட்டையை உரித்து பஞ்சு பிரித்தெடுக்கப்படும். அதில் உள்ள விதைகளை தனியே எடுத்து விற் பனைக்கு அனுப்புவோம் என்று கூறினார்.
விவசாயிகள் கூறுகையில், இடைத் தரகர்கள் பஞ்சுகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து குடோன்களில் சேகரித்து வெளியூர் வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் கூடுதல் விளைச்சல் இருந் தாலும் விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை. ஆகவே, இலவம் பஞ்சுக்கு விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.