ஆன்லைன் உணவு டெலிவரி பிளாட்ஃபார்மான ஸ்விக்கி (Swiggy), இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா துறையுடன் (IRCTC) இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியன் ரயில்களில் ஸ்விக்கி உணவு டெலிவரி சேவைகளில் ஈடுபட உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக Swiggy நிறுவனமானது பெங்களூரு, புவனேஸ்வர், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா வழியாக பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு உணவு டெலிவரி வழங்க உள்ளது . வரக்கூடிய வாரங்களில் இந்த சேவை இந்தியா முழுவதும் உள்ள 59 கூடுதல் நகர ரயில் நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்பதை நிறுவனம் தெரிவித்துள்ளது.
“ரயில் பயணத்தின்பொழுது நாம் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவ்வாறு நாம் பயணிக்கும்பொழுது அங்கு இருக்கக்கூடிய உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதன் மூலமாக இந்தியாவின் சமையல் சார்ந்த பன்முகத்தன்மையை அனுபவிப்பதற்கான வாய்ப்பு பயணிகளுக்கு கிடைக்கிறது. இது அவர்களது பயணத்தை இன்னும் சௌகரியமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்றும்,” என்று ஸ்விக்கி நிறுவனத்தின் ஃபுட் மார்க்கெட் பிளேஸ் CEO ரோஹித் கபூர் கூறினார்.
ஸ்விக்கி மூலமாக முன்கூட்டியே ஆர்டர் செய்த உணவு சேவைகளை பெறுவதற்கு பயணிகள் IRCTC அப்ளிகேஷனில் PNR ஐ என்டர் செய்ய வேண்டும். எந்த ரயில் நிலையத்தில் உணவு டெலிவரி வழங்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்த பிறகு, அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ள ரெஸ்டாரண்டுகளின் பட்டியல்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, அதில் தங்களுக்கு விருப்பமான உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட லொகேஷன் மற்றும் நேரத்தில் உணவை வழங்கும் ரெஸ்டாரண்டில் பயணிகள் உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டும்.
” ஸ்விக்கி உடனான இந்த பார்ட்னர்ஷிப் எங்களுடைய பயணிகளுக்கு இன்னும் அதிகப்படியான சௌகரியத்தையும், உணவு தேர்வுகளையும் வழங்கி இரயில் பயணத்தை மறக்க முடியாத ஒரு அனுபவமாக மாற்றும்,” என்று ஐஆர்சிடிசி சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் சஞ்சய் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.
Also Read : உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிக்கப்பட்டதா..? இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்..!
அதுமட்டுமல்லாமல் பயணிகளுக்கு டெலிவரி செய்யப்படும் உணவுகள் வெதுவெதுப்பாகவும், ஃபிரஷ் ஆகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு அவை ஸ்விக்கி பைகளில் இன்சுலேட்டட் முறையில் பேக்கிங் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பதையும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஸ்விக்கியின் டெலிவரி பார்ட்னர் டெலிவரிக்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாகவே குறிப்பிட்ட அந்த ரயில் நிலையத்திற்கு வந்து உணவை கஸ்டமரிடம் வழங்கிவிட்டு, உணவு டெலிவர் செய்யப்பட்டதாக குறிப்பிடுவார். ஸ்விக்கி மற்றும் இந்தியன் ரயில்வே எடுத்துள்ள இந்த முயற்சி நிச்சயமாக ரயில் பயணிகளுக்கு ஒரு புதுவித அனுபவத்தை வழங்கி மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…