நிதி மற்றும் வங்கிச் சேவைகள் சார்ந்த தேவைக்கு இன்றியமையாத ஒன்றாக இருப்பது கிரெடிட் கார்டு ஆகும். இந்த கிரெடிட் கார்டுகளை பெறுவதற்கு ஜாய்னிங் பீஸ் என்ற சேருதல் கட்டணம், ஆண்டு பராமரிப்புக் கட்டணம் போன்றவற்றை நாம் செலுத்த வேண்டியிருக்கும். அவசரத் தேவைக்கு பக்கபலமாக இருக்கட்டுமே என்று நாம் வாங்கி வைத்திருக்கும் கிரெடிட் கார்டுகளுக்கு இதுபோன்ற கட்டணம் வசூல் செய்யப்படுவது நமக்கு கூடுதல் சுமையாக தெரியும். ஆகையால் எந்த வித கூடுதல் கட்டணமும் இல்லாத கிரெடிட் கார்டுகளைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக இந்த சேருதல் கட்டணம் மற்றும் ஆண்டு பராமரிப்புக் கட்டணம் இருக்கக் கூடாது என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் நிலவுகிறது.
ஷாப்பர்ஸ் ஸ்டாப் ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு
இது வாழ்நாள் காலக்கெடு கொண்ட இலவச கிரெடிட் கார்டு ஆகும். இதனை வாங்கும் நபர்களுக்கு ஷாப்பர்ஸ் ஸ்டாப் மெம்பர்ஷிப் கூடுதலாக வழங்கப்படுகிறது. இதனால் உங்கள் ஷாப்பிங் அனுபவம் எளிமையானதாக மாறுகிறது. இதற்கு ஆண்டு சந்தா கட்டணம் எதுவும் கிடையாது.
அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு
இந்த வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கும்போது சேருதல் கட்டணம், ஆண்டு சந்தா கட்டணம் எதுவும் வசூல் செய்யப்பட மாட்டாது. இது மட்டுமல்லாமல் ரிவார்ட்ஸ் பாயிண்டுகள் கிடைக்கும். வரைமுறையற்ற ரிவார்ட் பாயிண்டுகளைப் பெறலாம் மற்றும் அதனை காலவரம்பின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
அமேசான் இந்தியா தளத்தில் பயன்படுத்தும்போது அமேசான் பிரைம் மெம்பராக இருந்தால் 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். அதுவே பிரைம் அல்லாத மெம்பராக இருந்தால் 3 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.
ஐசிஐசிஐ பிளாட்டினம் சிப் கிரெடிட் கார்டு
எரிபொருள் நிரப்புவதற்கான செலவு தவிர்த்த மற்ற அனைத்து செலவுகளையும் செய்யும்போது ஒவ்வொரு 100 தொகைக்கும் 2 ரிவார்ட்ஸ் பாயிண்ட் கிடைக்கும். ஹெச்பிசிஎல் பங்குகளில் எரிபொருள் நிரப்பினால் ரூ.4000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீதம் சர்சார்ஜ் தள்ளுபடி பெறலாம்.
ஆக்சிஸ் பேங்க் மைஜோன் கிரெடிட் கார்டு
ஒவ்வொரு ஆர்டரிலும் ரூ.120 வரை டிஸ்கவுண்ட் பெறலாம். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.500 செலவு செய்ய வேண்டும்.
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் கிளாசிக் கார்டு
எந்தவித ஆண்டு கட்டணமும் இல்லாமல் எப்போது இலவச சலுகையைப் பெறுவதற்கு இந்த கிரெடிட் கார்டு பெற்றுக் கொள்ளலாம். காலாவதி தேதியின்றி அளவற்ற ரிவார்ட்ஸ் பாயிண்டுகளைப் பெற முடியும்.
பேங்க் ஆஃப் பரோடா
டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள்ல் செலவு செய்யும் ஒவ்வொரு ரூ.100 தொகைக்கும் 5 ரிவார்டு பாயிண்டுகளைப் பெறலாம். இதற்கு ஆண்டுக் கட்டணம் எதுவும் கிடையாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…