The post இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது!! appeared first on SG Tamilan.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 48 வயது தைவான் பிரஜையின் சடலம் மார்ச் 15 அன்று கண்டெடுக்கப்பட்டது.
35 நபர்களை ஏற்றிச் சென்ற படகு, கரடுமுரடான அலைகள் காரணமாக மார்ச் 11ஆம் தேதி கெப்புலாவான் செரிபு பகுதிக்கு அருகே கவிழ்ந்தது.
மற்றவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், ஷி யி என அடையாளம் காணப்பட்ட தைவான் குடிமகன் கணக்கில் வரவில்லை.
விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் அவரது உடலை கடலோர காவல்படையினர் கண்டெடுத்தனர்.
அதிக அலைகளால் தேடுதல் தடைபட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin