இந்தியாவில் (india) கைது செய்யப்பட்ட ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் (Easter Attack) தொடர்பு இருப்பதான தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொழும்பு (Colombo), கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) இதனை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டப்பிரிவுக்கு பணிப்புரை
”இந்தியா (India) மீது தாக்குதல் நடத்தச் சென்ற போது கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ் உறுப்பினர்களில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற பெயரில் ஒருவரும் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளியாகியுள்ள இந்த தகவலினை கவனமாக விசாரிக்குமாறு காவல்துறை சட்டப்பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை சட்டப் பிரிவினால் இது தொடர்பில் தமக்கு விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும், ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |