புகைப்படக் கலைஞரான யானிக் திசேரா (Yannik Tissera) மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டத்தில் 12 விலங்கு இனங்களை இணைத்து புகைப்படம் எடுத்துள்ளார்,
ஜனவரி மாதத்தின் மூன்று வாரங்களுக்குள் மலையக பிரதேசத்தில் ஒரு இடத்தின் வழியாக பயணிக்கும் மிருகங்கள். ட்ரப் கெமரா (Trap Camera / Trail Camera) மூலம் பதிவு செய்யப்பட்ட வெவ்வேறு உயிரினங்களின் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை Focus stacking / Layer stacking முறையைப் பயன்படுத்தி பல புகைப்படங்களை இணைத்து இந்த அற்புதமான படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் 12 உயிரினங்கள் உள்ளன. இந்த அனைத்து உயிரினங்களும் இந்த இடத்தை இடம்பெயர்வதற்கான சந்திப்பாகவும், ஒரு நடைபாதையாகவும் பயன்படுத்துகின்றன.
The post இணையத்தில் வைரலாகும் இலங்கை புகைப்பட கலைஞரின் அற்புத படைப்பு appeared first on Thinakaran.