எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளர்களின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இரண்டாம் கட்ட விண்ணப்பம் பெறும் நடவடிக்கை மார்ச் 15 ஆம் திகதி முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

