46 வயதான ரஷ்ய- இஸ்ரேலிய இரட்டைக் குடியுரிமை பெற்றவரான செர்ஜி ஒச்சிகாவா என்ற நபர், விசா மற்றும் பாஸ்போர்ட் ஏதுமில்லாமல் அமெரிக்காவுக்குப் பயணித்ததால், அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் குற்றவாளியாக்கப்பட்டு, ஜூரியால் தண்டிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தின் ஆவணத்தின்படி, செர்ஜி ஒச்சிகாவா ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோபன்ஹேகனில் இருந்து புறப்பட்டு, நவம்பர் 4, 2023 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவரிடம் அப்போது பாஸ்போர்ட் மற்றும் விசா ஏதுமில்லாததால், மேலும் அவரின் பெயரை எந்த விமானத்தின் பட்டியலிலும் கண்டுபிடிக்க முடியாததால், அவரை அதிகாரிகள் கைதுசெய்தனர். அவரை ஐந்து ஆண்டுகளுக்கு மத்தியச் சிறையில் அடைக்கப் போவதாகக் கூறுகிறார்கள்.


அவர் அமெரிக்காவிற்குத் தவறான மற்றும் போலியான ஆவணங்களை வைத்து வந்துள்ளார். மேலும், அவர் தனது பாஸ்போர்ட்டை விமானத்திலேயே விட்டுவிட்டதாகக் கூறுகிறார். இது குறித்து விமானக் குழுவினர், “செர்ஜி ஒச்சிகாவை விமானத்தில் பலர் கவனித்தனர் என்று கூறுகின்றனர். அவர் ஒவ்வொரு இருக்கையிலும் மாறி மாறி அமர்ந்து வந்துள்ளார். உணவு சேவையின்போது இரு வேளைக்கான உணவை அவர் கேட்டுள்ளார்” எனக் கூறினர்.