இந்தியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ரிட்டன்களை வழங்கக்கூடிய மிகவும் பிரபலமான முதலீட்டு திட்டத்தில் ஃபிக்சட் டெபாசிட் ஒன்று. தபால் நிலைய டைம் டெபாசிட் அக்கவுண்ட் (TD) என்றும் அழைக்கப்படும் தபால் நிலைய FDகள் 1-, 2-, 3-, மற்றும் 5 ஆண்டு கால அளவுகளைக் கொண்டுள்ளன. எனினும் 5 வருட ஃபிக்சட் டெபாசிட் என்பது தபால் நிலைய வரி சேமிப்பு FD என்றும் அழைக்கப்படுகிறது. இந்த FD Exempt-Exempt-Exempt (EEE பிரிவு), என்ற பிரிவின் கீழ் வருகிறது. அதாவது இங்கு எக்ஸம்ப்ட் என்பது நீங்கள் செய்த முதலீட்டு தொகை, இதன் மூலமாக உங்களுக்கு கிடைத்த வட்டி மற்றும் மெச்சூரிட்டி தொகை ஆகிய எந்த ஒரு பணத்திற்கும் நீங்கள் வரி செலுத்த தேவையில்லை. 5 வருட தபால் நிலைய ஃபிக்சட் டெபாசிட்களில் 1.5 லட்சம் ரூபாய் வரை நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகளுக்கு வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C இன் கீழ் பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் மற்ற அனைத்து தபால் நிலைய ஃபிக்சட் டெபாசிட்களுக்கு மத்தியில் இது 7.5% வட்டி என்ற அதிக வட்டியை தருகிறது. இந்த ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்பட்டாலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. ஒருவேளை நீங்கள் இந்த திட்டத்தில் 10 லட்ச ரூபாயை முதலீடு செய்து FD முடிந்த பிறகு உங்கள் பணத்தை நீங்கள் வித்ட்ரா செய்யும் பொழுது உங்களுக்கு 4,49,948 ரூபாய் வட்டியாக கிடைக்கும். ஐந்து வருடங்களுக்கு நீங்கள் 5- வருட தபால் நிலைய FD இல் முதலீடு செய்து செய்தால் 5 வருடங்களில் உங்களுக்கு 7.5% வட்டி என்ற கணக்கீட்டில் 4,49,948, ரூபாய் வட்டியாகவும், உங்கள் முதலீட்டிற்கான மெச்சூரிட்டி தொகை 14,49,948 ரூபாயாகவும் கிடைக்கும்.
நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் திட்டம் என்றால் என்ன?
அரசு ஆதரவு பெறக்கூடிய இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டம் ஆண்டுக்கு ஒரு முறை வட்டியை வழங்குகிறது. அதே நேரத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி காம்பவுண்டு முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது வட்டிக்கு வட்டி என்ற கணக்கில் உங்களுக்கு பணம் கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சமாக 1000 ரூபாயை 100 களின் எண்ணிக்கையில் முதலீடு செய்யலாம். இதில் அதிகபட்ச ரிட்டன் வரம்பு கிடையாது. கால அளவுகளைப் பொறுத்து இந்த ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6.9% முதல் 7.5% வரை மாறுபடும். 1-, 2-, 3-, மற்றும் 5- வருட ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் முறையே 6.90 சதவீதம், 7.00 சதவீதம், 7.10 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் ஆக உள்ளது.
இதையும் படிங்க:
GST முதல் FASTag வரை.. மார்ச் மாதம் முதல் 6 முக்கிய மாற்றங்கள்
நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் திட்டம் மூலமாக கிடைக்கக்கூடிய வரிப் பலன்கள் என்ன?
ஐந்து வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டம் வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C இன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வரி பலன்களை வழங்குகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு 50,000 ரூபாய்க்கு மேலும், வழக்கமான டெபாசிட்டர்களுக்கு 40,000 ரூபாய் மேலும் வட்டி தொகை பெறும் பொழுது அதற்கு மூலத் தொகையிலிருந்து (TDS). கழிக்கப்படும்.
இந்த திட்டத்தில் யாரெல்லாம் தகுதி பெறுவார்கள்?
– பெரியவர்கள் தங்கள் பெயரில் அக்கவுண்ட் திறந்து அதனை இயக்கலாம் அல்லது மூன்று நபர்கள் வரை குழுவாக சேர்ந்தும் அக்கவுண்ட்டை திறக்கலாம்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
– சட்ட ரீதியான பாதுகாவலர் மூலமாக அக்கவுண்ட் பராமரிக்கப்படும் பட்சத்தில் மைனர்களின் பெயர்களிலும் அக்கவுண்ட்களை திறக்க தபால் நிலையம் அனுமதிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…