Zomato-வின் கோட்டையை உடைக்க வருகிறது Toing.. கூடவே பிளிப்கார்ட் வருதே..!
இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை மிகப்பெரிய ஆலமரம் போல் வளர்ந்து நிற்கும் வேளையில், இத்துறையில் புதிய போட்டி உருவாகியுள்ளது. உணவு டெலிவரி வர்த்தக சந்தை உருவானதில் இருந்து சோமேட்டோ, ஸ்விக்கி மத்தியில் மட்டுமே போட்டி இருந்து வந்த நிலையில் சமீபத்தில் 2-3 நிறுவனங்கள் புதிதாக வந்து பெரும் வர்த்தக சந்தையை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் சோமேட்டோவின் ஆதிக்கத்தையும் உடைக்கும் அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது.
ஸ்விக்கி இளம் வாடிக்கையாளர்களையும், குறைந்த தொகைக்கு உணவுகளை வாங்கும் மக்களையும் கவர்வதற்காக Toing என்ற பிரத்தியேக தளத்தை ஒரு வருடத்திற்கு முன்பு உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.

இதில் ஆச்சரியப்படும் அளவிலான விஷயம் என்னவென்றால் சோமேட்டோ இத்தனை வருடங்களாக அரும்பாடுபட்டு சேர்த்த 40 மில்லியன் வாராந்திர ஆக்டிவ் வாடிக்கையாளர்களை Toing தளம் வெறும் ஒரு வருடத்திலேயே நெருங்கிவிட்டது. இதன் மூலம் உணவு டெலிவரி பிரிவில் ஆதிக்க நிலையில் அடி விழ துவங்கியுள்ளது.
சோமேட்டோவின் வாராந்திர ஆக்டிவ் வாடிக்கையாளர் எண்ணிக்கை 35 மில்லியனாக இருக்கும் வேளையில் Toing 33 மில்லியன் அளவீட்டை எட்டியுள்ளது. ஸ்விக்கி தொடர்ந்து 40 மில்லியனுடன் முதல் இடத்தில் உள்ளது என சென்சார் டவர் டேட்டா வெளியிட்ட தரவுகள் கூறுகிறது.
இதேபோல் ஆன்லைன் உணவு டெலிவரி துறையில் இருக்கும் டாமினோஸ் 10 மில்லியன் வாடிக்கையாளர்களையும், ரேபிடோவின் Ownly 2.5 மில்லியன் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.
தற்போது ஆன்லைன் டெலிவரி சேவையில் பொருட்கள் அல்லது உணவுகளின் கட்டணத்தை தாண்டி இதர கட்டணங்கள் தான் பெரும் தலைவலியாக மக்கள் உணர்கின்றனர். இத்தகைய கட்டணம் இல்லாத தங்களுக்கு மக்கள் ஆர்வமாகவும், வேகமாகவும் நகர்கின்றனர். இதற்கான உதாரணமாக செப்டோ திகழ்கிறது.
மேலும் உணவு டெலிவரி சேவை பிரிவில் 2-3 நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செய்து வரும் வேளையில் சமீபத்தில் குவிக் காமர்ஸ் துறையில் இறங்கிய ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் Eat In என்ற புதிய பிராண்டு பெயருடன் உணவு டெலிவரி சேவை பிரிவில் இறங்கியுள்ளது. முதல்கட்டமாக பெங்களூரில் மட்டும் இச்சேவையை அறிமுகம் செய்ய பிளிப்கார்ட்.
தற்போது இந்தியாவில் அனைத்து உணவு டெலிவரி நிறுவனங்களும் குறைவான விலையை எதிர்நோக்கும் வாடிக்கையாளர்களை குறிவித்து புதிய சேவைகள், புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக ஃப்ரீ டெலிவரி, ஃப்ரீ பேகேஜ் கட்டணம் போன்றவை முக்கியமானதாக இருக்கிறது.
