• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

YouTube சேனலில் இனி காசு பார்க்கிறது கஷ்டம்.. 8 ஆண்டுகளுக்கு பின் Monetisation விதிகள் மாற்றம்.. | YouTube Partner Program 2027: New 8,000 Watch Hours & 20M Shorts Rules for Monetisation in India

GenevaTimes by GenevaTimes
August 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
YouTube சேனலில் இனி காசு பார்க்கிறது கஷ்டம்.. 8 ஆண்டுகளுக்கு பின் Monetisation விதிகள் மாற்றம்.. | YouTube Partner Program 2027: New 8,000 Watch Hours & 20M Shorts Rules for Monetisation in India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


YouTube சேனலில் இனி காசு பார்க்கிறது கஷ்டம்.. 8 ஆண்டுகளுக்கு பின் Monetisation விதிகள் மாற்றம்..

உலகளவில் யூடியூப் வீடியோ தளத்தின் வளர்ச்சியால் பலருக்கும் வருமானம் கிடைக்கிறது. தங்கள் திறமைகளை யூடியூப் சேனல்களை உருவாக்கி அவற்றில் வீடியோவாக வெளியிட்டு பலரும் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் இனி வரும் காலங்களில் யூடியூப் மூலம் சம்பாதிப்பது அத்தனை எளிதாக இருக்காது.

யூடியூப், தனது யூடியூப் பார்ட்னர் புரோகிராம் (YouTube Partner Program ) விதிகளில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. வரும் 2027 பிப்ரவரி 1 முதல் இந்த புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. குறிப்பாக கண்டண்ட் கிரியேட்டர்கள் வருமானம் ஈட்டுவதற்கான வரம்புகள் பெருமளவு மாற்றப்பட்டுள்ளன.

YouTube சேனலில் இனி காசு பார்க்கிறது கஷ்டம்.. 8 ஆண்டுகளுக்கு பின் Monetisation விதிகள் மாற்றம்..

2027 பிப்ரவரி 1 முதல் யூடியூப் மூலம் விளம்பரங்கள் மற்றும் பிரீமியம் சந்தா வருமானத்தை பகிர்ந்துகொள்ள விரும்பும் புதிய படைப்பாளிகள் வாட்ஸ் ஹவர்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வியூஸ்களில் இன்னும் அதிக வரம்பை எட்ட வேண்டும். அதாவது

வாட்ச் ஹவர்ஸ் (Watch hours): கடந்த 365 நாட்களில் 8,000 தகுதியான வாட்ச் ஹவர்ஸ் இருக்க வேண்டும்

ஷார்ட்ஸ் வியூஸ் (Shorts views): கடந்த 90 நாட்களில் 20 மில்லியன் தகுதியான ஷார்ட்ஸ் வியூஸ் இருக்க வேண்டும்

கூடுதலாக, வழக்கம்போல 1,000 சந்தாதாரர்களை கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாகும். இவை இருந்தால் தான் monetization செய்யவே விண்ணப்பம் செய்ய முடியும். அதேசமயம், ஃபேன் ஃபண்டிங் (Fan Funding) மற்றும் ஷாப்பிங் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான தற்போதைய விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஏற்கனவே யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் இணைந்துள்ள கிரியேட்டர்களுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தாது. புதிதாக சேனல் தொடங்குவோருக்கு இந்த விதிகள் பொருந்தும். யூடியூபில் செயல்படும் படைப்பாளிகளை ஊக்குவிக்கவும், வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல ஏற்கனவே யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு வரும் நபர்கள், ஷார்ட்ஸ் மூலம் தொடர்ந்து வருமானம் ஈட்ட வேண்டுமெனில், பிப்ரவரி 1 முதல், கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் தகுதியான ஷார்ட்ஸ் வியூஸை பெற்றிருக்க வேண்டும். இந்த இலக்கைத் தவறவிடும் சேனல்கள், பார்ட்னர் புரோகிராமிலிருந்து நீக்கப்பட மாட்டார்கள். அவர்கள் Long-form content மூலம் தொடர்ந்து வருமானம் ஈட்டலாம்.எப்போது அந்த சேனல் மீண்டும் 10 மில்லியன் ஷார்ட்ஸ் வியூஸ் இலக்கை எட்டுகிறதோ, அப்போது ஷார்ட்ஸ் மூலம் வருமானம் ஈட்டும் வசதி தானாகவே மீண்டும் தொடங்கும்.

10 மில்லியன் ஷார்ட்ஸ் வியூஸ் இலக்கை எட்டாத சேனல்கள், யூடியூப் ஷாப்பிங் (YouTube Shopping) மூலம் போனஸ், பிராண்ட் டீல்கள் (Brand deals) மூலம் கட்டணம், புதிய டிரெண்டுகளை உருவாக்குவதன் மூலம் கூடுதல் வருமானம் என பல்வேறு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என யூடியூப் தெரிவித்துள்ளது.

எனவே யூடியூப் சேனல் நடத்துவோர், புதிதாக சேனல் தொடங்க விரும்புவோர் இந்த மாற்றங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். யூடியூப் மூலம் வருமானம் ஈட்ட விரும்புவோர் வாட்ச் ஹவர்ஸ் மீது கவனமாக இருப்பது நல்லது.

Share This Article

English summary

YouTube Partner Program 2027: New 8,000 Watch Hours & 20M Shorts Rules for Monetisation in India

YouTube சேனலில் இனி காசு பார்க்கிறது கஷ்டம்.. 8 ஆண்டுகளுக்கு பின் Monetisation விதிகள் மாற்றம்.. / YouTube is tightening its Partner Program (YPP) monetisation rules from February 1, 2027, raising the bar for new creators in India and globally. To qualify for ad and Premium revenue sharing, new channels will need either 8,000 valid public watch hours in the past 365 days or 20 million qualified Shorts views in the last 90 days.

Story first published: Wednesday, August 12, 2026, 13:31 [IST]

Other articles published on Aug 12, 2026

Read More

Previous Post

பூணூல் அணிவீர்களா? குடுமி போடுவீர்களா? ராமர் கோவில் சிஇஓ தேர்வில் கேள்விகளை பாருங்க | Do you eat non Veg and drinks? do you wear janeu? what are the questions for Ram Temple CEO Job Interview

Next Post

பிளைவுட் நிறுவனம் 3 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புலம்பெயர் தொழிலாளர்கள் புகார் | Makkal Osai

Next Post
பிளைவுட் நிறுவனம் 3 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புலம்பெயர் தொழிலாளர்கள் புகார் | Makkal Osai

பிளைவுட் நிறுவனம் 3 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புலம்பெயர் தொழிலாளர்கள் புகார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin