Last Updated:
கூகுள் வெளியிட்டுள்ள பட்டியலில், ‘பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் 2025’ பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார் தெரியுமா?
பிரபல சர்ச் என்ஜினான கூகுள், 2025ஆம் ஆண்டிற்கான தேடுதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் முதலிடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் அல்ல, இளம் இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அபிஷேக் சர்மாவின் பேட்டிங்தான் என்று தெரிகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான நான்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் 3 ஆசியக் கோப்பையிலும், ஒரு சாம்பியன்ஸ் டிராபியிலும் வென்றுள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பையில் அபிஷேக் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். போட்டியில் அவர் 44.85 சராசரி மற்றும் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 314 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதல் போட்டியில், அவர் வெறும் 13 பந்துகளில் 31 ரன்களையும், சூப்பர்-4 போட்டியில் 39 பந்துகளில் 74 ரன்களையும் எடுத்து அசத்தினார். இருப்பினும், இறுதிப் போட்டியில் அவர் தோல்வியடைந்த போதிலும், அவரது முந்தைய செயல்திறன் பாகிஸ்தானில் அபிஷேக்கைத் தேடுவதை அதிகரித்துள்ளது.
கூகுள் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், கூகுளின் ‘பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் 2025’ பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்தைப் பிடித்தார். மேலும், முதல் 5 இடங்களுக்குள் வந்த முதல் பாகிஸ்தான் அல்லாத வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அபிஷேக் சர்மாவைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹசன் நவாஸ், இர்ஃபான் கான் நியாசி மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் உள்ளனர்.
| அபிஷேக் சர்மா | இந்திய கிரிக்கெட் வீரர் |
| ஹசன் நவாஸ் | பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் |
| இர்ஃபான் கான் நியாசி | பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் |
| சாஹிப்சாதா ஃபர்ஹான் | பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் |
| முகமது அப்பாஸ் | பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் |
பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்தியாவிலும் அபிஷேக் சர்மா முதல் 3 இடங்களில் உள்ளார். இந்தப் பட்டியலில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் 2025இல் சிறப்பாக செயல்பட்ட வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஆகியோருக்குப் பிறகு அபிஷேக் சர்மா மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸும் முதல் 10 இடங்களில் உள்ளார். இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வெல்ல ஜெமிமா முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைபவ் சூர்யவன்ஷி
பிரியான்ஸ் ஆர்யா
அபிஷேக் சர்மா
ஷேக் ரஷீத்
ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஆயுஷ் மத்ரே
ஸ்மிருதி மந்தனா
கருண் நாயர்
ஊர்வில் படேல்
விக்னேஷ் புதூர்
Dec 18, 2025 10:11 PM IST


