Last Updated:
Yamuna Water Pollution Controversy | யமுனை நதியின் நீரில் விஷம் கலந்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் சுமத்திய குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக அந்த நீரை ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி பருகி முற்றுப்புள்ளி வைக்க முற்பட்ட நிலையில், மற்றொரு வீடியோவால் மீண்டும் சர்சையாகியுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் யமுனை நதியில் நச்சு கலப்பது தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
டெல்லி மக்களுக்கு தண்ணீர் வழங்கும் யமுனை நதியில் ஹரியானா அரசு விஷத்தை கலந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்படுவதற்கு முன்பு டெல்லி நீர் வாரியத்தின் என்ஜினீயர்கள் சரியான தருணத்தில் கண்டறிந்து, தடுத்தனர். இல்லையென்றால் அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள். நீருடன் விஷம் கலப்பதற்கு முன்பே அது தடுக்கப்பட்டது எனவும் பரபரப்பு கருத்தை தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கை கோர்த்துள்ளன.
இதற்கு பிரதமர் மோடி, அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் விஷம் கலப்பதாக உண்மைக்கு மாறான கருத்து தெரிவித்து டெல்லி மற்றும் அரியானா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கெஜ்ரிவால் மீது அரியானா அரசு சோனிபட் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேஹா கோயல், வரும் 17ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதேபோல இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் பல்லா கிராமத்தில் யமுனை நதியின் நீரை முதலமைச்சர் நயாப் சிங் சைனி கையில் எடுத்து பருகினார். யமுனை நதி நீரை பரிசோதித்து பார்த்தபோது விஷம் போன்ற எதுவும் கலக்கப்படவில்லை என்றும் கெஜரிவாலின் குற்றச்சாட்டு நாட்டு மக்களை அவமதிப்பது போல இருப்பதாகவும் நயாம் சிங் சைனி தெரிவித்தார்.
हरियाणा के मुख्यमंत्री नायब सिंह सैनी जी ने यमुना का पानी पीने का ढोंग किया… और फिर वही पानी वापस यमुना में थूक दिया।
जब मैंने कहा कि अमोनिया की मिलावट के कारण यमुना का पानी दिल्लीवालों की जान के लिए ख़तरा हो सकता है, तो इन्होंने मुझ पर FIR करने की धमकी दी।
जिस ज़हरीले पानी… pic.twitter.com/xQEVAu9bWh
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 29, 2025
அதேநேரம் நயாப் சிங் சைனி யமுனை நீரை பருகுவது போல் நடித்ததாகவும், அவர் பருகிய நீரை நதியிலேயே துப்பிவிட்டதாகவும் வீடியோ ஒன்றை பதிவிட்டு கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
January 30, 2025 12:25 PM IST


