Last Updated:
இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் அணிகள் பெற்ற வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
இந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் கோப்பையை வென்றது. அந்த அணி வென்ற முதல் ஐசிசி கோப்பை இதுதான் என்பது கவனிக்கத்தக்கது.
அடுத்ததாக 2027 ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இந்திய அணி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று முதலிடத்திலும், இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று 1 போட்டியைடிரா செய்து 2 ஆவது இடத்திலும் உள்ளது.
October 14, 2025 8:56 PM IST