• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

WTC Final : 6 விக். அள்ளிய பாட் கம்மின்ஸ்.. 138 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

GenevaTimes by GenevaTimes
June 12, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
WTC Final : 6 விக். அள்ளிய பாட் கம்மின்ஸ்.. 138 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 12, 2025 7:49 PM IST

தற்போது வரை ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

பாட் கம்மின்ஸ்பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவன் ஸ்மித் 66 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு அருமையாக ஒத்துழைத்து வருகிறது. 212 ரன்கள் குறைவானதாகக் கருதப்பட்ட நிலையில், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி தென்னாப்பிரிக்க அணிக்குக் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

57.1 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பெடிங்கம் 45 ரன்களும் கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 74 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்றைக்கே இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியிருப்பதால் நாளை அல்லது நாளை மறுதினத்திற்குள் மேட்ச் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 12, 2025 7:49 PM IST

Read More

Previous Post

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு | Former Gujarat Chief Minister Vijay Rupani dead in Ahmedabad plane crash

Next Post

குறைவான CIBIL ஸ்கோருடன் பர்சனல் லோன் வாங்கணுமா…? இத ஃபாலோ பண்ணுங்க..

Next Post
குறைவான CIBIL ஸ்கோருடன் பர்சனல் லோன் வாங்கணுமா…? இத ஃபாலோ பண்ணுங்க..

குறைவான CIBIL ஸ்கோருடன் பர்சனல் லோன் வாங்கணுமா...? இத ஃபாலோ பண்ணுங்க..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin