• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

WTC Final | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிகா பலம் பலவீனம் என்ன?

GenevaTimes by GenevaTimes
June 11, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
WTC Final | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிகா பலம் பலவீனம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் வருகைக்குப் பிறகு டெஸ்ட் போட்டி மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் குறையத் தொடங்கியது. இதைச் சரிசெய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிக்கென பிரத்யேகமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளும் மற்ற அணிகளுடன் இரண்டு ஆண்டுகளாக விளையாடிய டெஸ்ட் போட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு அணிகளும் பெற்ற வெற்றி, தோல்விகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இறுதியில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சாம்பியன் பட்டத்திற்குப் பலப்பரீட்சை நடத்தும்.

அந்த வகையில் 69.44 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தையும், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 67.54 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்திய அணி 50 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் சற்று முன்னிலை வகித்தாலும், தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள வீரர்களை விட ஆஸ்திரேலிய அணியில் உள்ள வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

ஸ்டீவன் ஸ்மித் மட்டுமே இங்கிலாந்தில் 2255 டெஸ்ட் ரன்கள் எடுத்துள்ளார். இதில் மொத்த தென் ஆப்பிரிக்க அணியும் சேர்த்தே 771 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் உள்ள நான்கு முன்னணி பந்து வீச்சாளர்களான கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் ஆகியோர் 50க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையே 62 விக்கெட்டுகள் மட்டுமே.

லார்ட்ஸ் மைதானத்தைப் பொறுத்தவரையில், இரு அணிகளும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த மைதானத்தில் நடந்த 23 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் மட்டுமே ஆஸ்திரேலியா தோல்வியடைந்துள்ளது, அவற்றில் 12 இல் வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஒன்றை இழந்துள்ளது.

லார்ட்ஸ் மைதானம் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்க பூமிதான். டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் பத்து இடத்தில் உள்ள ரபாடா, ஹேசில்வுட், ஜான்சன், ஸ்டார்க், மகாராஜ், லயன் என 6 வீரர்கள் இந்தப் போட்டியில் பந்து வீசவுள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் டாப் 10 பேட்ஸ்மென்களில் ஸ்டீவ் ஸ்மித், பவுமா, டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா ஆகிய நால்வர் இந்தப் போட்டியில் விளையாடுவது சரிக்குச் சமமான பலப்பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, ஐசிசி கோப்பைகள் எல்லாம் சர்வசாதாரணம். அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 1998க்குப் பிறகு எந்த ஐசிசி கோப்பையும் கிட்டவில்லை. 27 ஆண்டு கனவை நனவாக்குமா தென் ஆப்பிரிக்கா அணி? காத்திருக்கிறார்கள் அந்நாட்டு ரசிகர்கள்.

First Published :

June 11, 2025 2:34 PM IST

Read More

Previous Post

செனாப் ரயில் பாலம் குறித்து விமானத்தில் அறிவிப்பு! அப்புறம் என்ன?

Next Post

இனி பைக் டேக்ஸி சேவை மட்டுமில்லை… ரேபிடோவின் அடுத்த திட்டம் இதுதான்

Next Post
இனி பைக் டேக்ஸி சேவை மட்டுமில்லை… ரேபிடோவின் அடுத்த திட்டம் இதுதான்

இனி பைக் டேக்ஸி சேவை மட்டுமில்லை... ரேபிடோவின் அடுத்த திட்டம் இதுதான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin