Last Updated:
முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்திய அணியின் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி பாகிஸ்தானை விடவும் பின்னுக்குச் சென்றுள்ளது.
ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், உள்ளூரில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மோசமான ரெக்கார்டுகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரை 3-0 என முழுமையாக இழந்த நிலையில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்திருக்கிறது. இதனால் இந்திய அணி மீதும் அதன் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதும் விமர்சனங்கள் கடுமையாக எழுந்துள்ளன.
இந்த 2 போட்டிகளில் அடைந்த தோல்வியின் மூலம் இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு சென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றியும், 4-இல் தோல்வியும் அடைந்துள்ளது.
ஒரு போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இதன் அடிப்படையில் இந்திய அணி 48.15 என்ற வெற்றி சதவீதத்தைப் பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து 50 வெற்றி சதவீதத்துடன் நான்காம் இடத்தில் உள்ளது.
November 27, 2025 3:39 PM IST


