Last Updated:
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் உடன் மோதியது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தது.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 74 ரன்கள் எடுத்தார்.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி, மும்பையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. இறுதியில் 19 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்த டெல்லி அணி 145 ரன்களில் சுருண்டது.
Jan 11, 2026 11:06 AM IST


