மனிதர்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கான பொருட்களை உருவாக்கியுள்ளனர். அதில் பல பொருட்கள் இன்றும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. அதிலும் மிகவும் விலை உயர்ந்த பொருள் விண்வெளியில் இருக்கிறது. அதாவது சர்வதேச விண்வெளி நிலையம் இதுவரை 150 பில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் மிகவும் விலை உயர்ந்த பொருளாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
அத்துடன் இந்த விலை உயர்ந்த விண்வெளி நிலையத்தை நிர்வகிக்க நாசாவுக்கு ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர்கள் செலவாகிறது. 1980 களில் முற்பகுதியில் விண்வெளி மையத்தை உருவாக்க நாசா முடிவு செய்தது. ஆனால், அது ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று உணரப்பட்டதால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ரஷ்ய விண்வெளி நிறுவனம், ஜப்பான் மற்றும் கனடா நாடுகளின் விண்வெளி நிறுவனங்களும் ஒன்றாக சேர முன்வந்தன.
நவம்பர் 20, 1998 அன்று இது விண்ணில் செலுத்தப்பட்டது. முதலில் நிலவு, செவ்வாய் மற்றும் சிறுகோள்களின் பயணம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான நிறுவப்பட்ட இந்த சர்வதேச விண்வெளி நிலையம், தற்போது வரை அறிவியல் ஆராய்ச்சி, விண்வெளி ஆய்வு மற்றும் கல்வி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.
இதையும் படிங்க:
இந்தியாவின் முதல் விமானி… பாரத ரத்னா பெற்ற ஒரே தொழிலதிபர்
தேவைக்கு ஏற்ப சர்வதேச விண்வெளி நிலையத்தில் அலகுகள் சேர்க்கப்பட்டாலும், அதற்கான பணி முடிந்த பிறகு அகற்றப்படுகிறது. வளிமண்டல கட்டுப்பாடு அமைப்பு, நீர் வழங்கல் அமைப்பு, உணவு வழங்கல் வசதிகள், சுகாதாரம் மற்றும் சுகாதார உபகரணங்கள் மற்றும் தீ அணைக்கும் கருவிகள் ஆகியவை சர்வதேச விண்வெளி நிலையத்தில் அடங்கியுள்ளன.
இது தவிர சர்வதேச விண்வெளி நிலையத்தில் தகவல் தொடர்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் இந்த கட்டமைப்பை கையாளுவதற்கு ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் செலவிடப்படுவதால், ஆண்டுதோறும் அதன் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
.