Last Updated:
இந்திய அணி விளையாடாத நிலையில், இன்றைக்கு மைதானத்தில் பெருவாரியான இருக்கைகள் ரசிகர்களால் நிரம்பியிருந்தன.
தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் 86 ரன்கள் குவித்த நிலையில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 24 ஆவது லீக் போட்டியாக குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் சம பலம் கொண்டவை என்பதால் இன்றைய ஆட்டத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். இந்தியா அணி விளையாடாத நிலையில், இன்றைக்கு மைதானத்தில் பெருவாரியான இருக்கைகள் ரசிகர்களால் நிரம்பியிருந்தன.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் 31 ரன்களும், மார்க் சாப்மேன் 48 ரன்களும், டேரில் மிட்செல் 32 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நியுசிலாந்து அணி 175 ரன்கள் சேர்த்தது.
ஓரளவு சவாலான இலக்கை நியூசிலாந்து நிர்ணயித்த நிலையில் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற டார்கெட்டை நோக்கி, தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் சேஸிங்கை தொடங்கினர்.
தொடக்க வீர்ராக களம் இறங்கிய குவின்டன் டி காக் 20 ரன்களும், ரியான் ரிக்கெல்டன், டெவால்ட் ப்ரேவிஸ் தலா 21 ரன்களும் எடுத்து வெளியேறினர். மறுமுனையில் கேப்டன் எய்டன் மார்க்ரம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார்.
Feb 14, 2026 10:32 PM IST


