Last Updated:
ஆஸ்திரேலிய அணியில் நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் 14 ஆவது லீக் போட்டியாக குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியில் ஜோஷ் இங்லீஷ், மேட் ரென்ஷா தல 37 ரன்கள் எடுத்தனர். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 45 ரன்கள் அதிரடியாக சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 182 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியால் 16.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

