Last Updated:
கடைசி 4 ஓவர்களில் நெதர்லாந்து அணி அதிரடியாக பேட்டிங் செய்து ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்தது
டி20 உலகக்கோப்பையின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், நெதர்லாந்து அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பம் சற்று பின்னடைவாக அமைந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா இந்த போட்டியிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இஷான் கிஷன் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இருப்பினும் சிவம் துபேயின் அதிரடி ஆட்டம் அணியை மீட்டெடுத்தது. துபே வெறும் 31 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாச, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களும், ஹர்திக் பாண்டியா 30 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
194 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியது. இருப்பினும், பாஸ் டி லீடே 33 ரன்களும், ஜாக் லயன்-காசெட் 26 ரன்களும் எடுத்தனனர். இதனால் ஆட்டம் பரபரப்பான நிலையை எட்டியது.
தொடக்கத்தில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் கடைசி 4 ஓவர்களில் நெதர்லாந்து அணி அதிரடியாக பேட்டிங் செய்து ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்தது
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தனது மாயாஜால பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளைச் சரித்து நெதர்லாந்தின் வெற்றியைத் தடுத்தார். சிவம் துபே பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலித்தார்.
Feb 18, 2026 11:12 PM IST
World Cup T20 : 4 ஆவது லீக் போட்டியிலும் இந்திய அணி வெற்றி.. 17 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது..

