Last Updated:
அரையிறுதியைப் பொருத்தவரை, மழையால் ஆட்டம் தடைபட்டால், அதற்கு அடுத்த நாளில் போட்டி தொடர்ந்து நடத்தப்படும்.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று இரவு கொல்கத்தா மைதானத்தில் நடைபெறுகிறது. இருபது ஓவர் உலகக் கோப்பை திருவிழாவில் இன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மல்லுக்கட்டவுள்ளன.
இறுதிப் போட்டிக்கு முதல் அணியாகச் செல்வது யார் என தீர்மானிக்கும் இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்காவும் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்தும் களமிறங்கவுள்ளன. கடந்த முறை இறுதிப் போட்டி வரை முன்னேறி வந்த தென்னாப்பிரிக்கா, இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி அதன் கோப்பை கனவு தகர்ந்தது.
அதேபோல நியூசிலாந்து அணியும் ஒருமுறை கூட டி-20 உலகக் கோப்பையை வெல்லாத நிலையில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அரையிறுதியின் மற்றொரு போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் நாளை மும்பை வான்கடேவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அரையிறுதியைப் பொருத்தவரை, மழையால் ஆட்டம் தடைபட்டால், அதற்கு அடுத்த நாளில் போட்டி தொடர்ந்து நடத்தப்படும்.


