Last Updated:
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால், இலங்கை அணியை சுமார் 64 முதல் 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு குறைவான நெட் ரன் ரேட் இருப்பதால் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினமாக மாறியுள்ளது.
இன்றைக்கு இலங்கை அணியுடன் பாகிஸ்தான் மோதும் நிலையில் மிகப்பெரிய அளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில், சூப்பர் 8 குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து அணி தனது மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.
இரண்டாவது இடத்தைப் பிடிக்க நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. நியூசிலாந்து தனது லீக் போட்டிகள் அனைத்தையும் விளையாடி 3 புள்ளிகளுடன் (+1.390 NRR) காத்திருக்கிறது.
பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு புள்ளி மட்டுமே பெற்றுள்ள நிலையில், இன்று இலங்கைக்கு எதிரான கடைசிப் போட்டியில் களம் காணுகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்குச் செல்லும் ஒரு சிறிய வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது.
ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்த பாகிஸ்தான் அணி இலங்கையை ஒரு சாதாரண வெற்றியாக அல்லாமல், மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஐசிசி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கணக்கீட்டின்படி, பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் நெட் ரன் ரேட்டை முந்த வேண்டுமெனில், இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால், இலங்கை அணியை சுமார் 64 முதல் 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். ஒருவேளை இரண்டாவதாகப் பேட்டிங் செய்தால், இலங்கை நிர்ணயிக்கும் இலக்கை 13 ஓவர்களுக்குள் (சரியாக 13.1 ஓவர்கள்) எட்டிப் பிடிக்க வேண்டும்.


