Last Updated:
கடைசி ஓவரில் நேபாளம் அணி வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நேபாளம் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதிய போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பிலிப் சால்ட் 1 ரன்னிலும், அனுபவ வீரர் ஜாஸ் பட்லர் 26 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேக்கப் பெதேல் – ஹேரி ப்ரூக் இணை அதிரடியாக ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தியது.
இருவரும் அரைச்சதம் கடந்த நிலையில் ஜேக்கம் பெதேல் 55 ரன்களும், ப்ரக் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவர்களில் வில் ஜாக்ஸ் அதிரடியாக 18 பந்துகளில் 39 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி அதிக அனுபவம் இல்லாத நேபாளம் அணி களம் இறங்கியது. அதன் தொடக்க வீரர்கள் குஷால் பர்ட்டெல் 29 ரன்களும், ஆசிப் ஷேக் 7 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் ரோஹித் படேல் 34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். தீபேந்திர சிங் 44 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். 19 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தபோது, கடைசி ஓவரில் நேபாளம் அணி வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்டது.
இதனை இங்கிலாந்து அணியின் சாம் கரன் வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. 2 மற்றும் 3 ஆவது பந்தில் தலா 1 ரன் எடுக்கப்பட்டது. 4 ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட, கடைசி 2 பந்துகளில் நேபாளம் அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5 ஆவது பந்தில் ரன் எடுக்கப்படவில்லை.


