Last Updated:
நெட் ரன் ரேட் அடிப்படையில் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று குரூப் 2 பிரிவில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி இலங்கையின் பல்லெகலே மைதானத்தில் நடைபெற்றது.
அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இலங்கை அணியை சுமார் 64 முதல் 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இரண்டாவதாகப் பேட்டிங் செய்தால், இலங்கை நிர்ணயிக்கும் இலக்கை 13 ஓவர்களுக்குள் (சரியாக 13.1 ஓவர்கள்) எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களம் இறங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்ய, தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் சகிப்சதா பர்கான் மற்றும் பகர் ஜமான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பகர் ஜமான் 84 ரன்களும், சகிப்சதா 100 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 212 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களம் இறங்கியது.
இந்த சூழலில், இலங்கை அணியை 147 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்து விட்டால் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்கிற நெருக்கடி அந்த அணிக்கு ஏற்பட்டது.
சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இருப்பினும், கமில் மிசாரா 26 ரன்களும், சரித் அசலங்கா 25 ரன்களும், பவன் ரத்னாயகே 58 ரன்களும் அதிரடியாக சேர்த்து பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவை தகர்த்தனர்.
கேப்டன் தசுன் ஷனகா தனது பங்கிற்கு 31 பந்துகளில் 8 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து அணியை வெற்றியின் அருகே அழைத்துச் சென்றார். குறிப்பாக கடைசி ஓவரில் அவர் அடித்த ஹாட்ரிக் சிக்சர் பாகிஸ்தான் ரசிகர்கள் மேல் இடியால் இறங்கியது.
கடைசி பந்தில் இலங்கை அணி வெற்றி பெற 6 ரன்கள் தேவைப்பட்டபோது அந்த பதில் ஷனகாவால் ரன் எடுக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இருப்பினும் நெட் ரன் ரேட் அடிப்படையில் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
Feb 28, 2026 11:00 PM IST


