Last Updated:
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஆரம்பமாகின்றன. அன்றைய தினம் மூன்று போட்டிகளை ஐசிசி நடத்துகிறது.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அது குறித்த போட்டி அட்டவணையை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி மோதும் போட்டிகள் குறித்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
இதன்படி பிப்ரவரி 15ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருக்கிறது. இதில் இந்திய அணியுடன் நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன.
தற்போது குரூப் போட்டிகள் அளவிலான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி மற்ற நான்கு அணிகளுடன் ஒருமுறை மோதும். பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மும்பையில் நடைபெறும். அனைத்துப் போட்டிகளுமே இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் மேட்சில் நமீபியா அணியையும், பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையின் கொழும்பில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
குரூப் பிரிவில் இந்தியாவின் கடைசி போட்டி பிப்ரவரி 18ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்கொண்டு விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஆரம்பமாகின்றன. அன்றைய தினம் மூன்று போட்டிகளை ஐசிசி நடத்துகிறது.
November 25, 2025 8:15 PM IST


