Last Updated:
தென்கிழக்கு வங்கக்கடலில் பிப்ரவரி 15-ஆம் தேதியன்று ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை மோதவுள்ள நிலையில் இன்று போட்டி நடைபெறவுள்ள கொழும்பு மைதானத்தில் மழை பெய்ததால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களிலம், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையாக காணலாம்.
இந்த மேட்ச்சினை இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அதிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.
இதனை முன்னிட்டு இரு அணிகளின் கேப்டன்கள் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார்கள். அதில் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் அபிஷேக் சர்மா விளையாடுவார் என்ற தகவலை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே போட்டி நடைபெறும் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று மாலையில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் நாளைக்கும் மழை நீடிக்குமோ என்கிற கவலையில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் பிப்ரவரி 15-ஆம் தேதியன்று ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாகக் கொழும்புவில் அன்று கனமழை பெய்யக்கூடும்.
Feb 14, 2026 10:11 PM IST


