Last Updated:
வெற்றி பெற வாய்ப்புகள் இருந்தபோதிலும், கடைசி 4 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து பவுலர்கள் வெற்றியை தங்கள் வசப்படுத்தினர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்து அணிக்கு இத்தாலி கடும் போட்டியாக இருந்த்து. இறுதியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இத்தாலி அணி தோல்வியடைந்தது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் பிலிப் சால்ட் 28 ரன்களும், ஜேக்கப் பெதேல் 23 ரன்களும் எடுத்தனர்.
டாம் பேன்டன் 30 ரன்கள் சேர்க்க கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 202 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இத்தாலி அணி விளையாடியது. அனுபவமற்ற அணியாக இருந்தாலும், இத்தாலி பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர்.
அந்த அணியின் தொடக்க வீரர் ஜஸ்டின் மோஸ்கா 43 ரன்கள் எடுத்தார். பென் மனேட்டி 25 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 60 ரன்கள் குவித்தார். கிரான்ட் ஸ்டூவர்ட் 45 ரன்கள் எடுத்தார். வெற்றி பெற வாய்ப்புகள் இருந்தபோதிலும், கடைசி 4 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து பவுலர்கள் வெற்றியை தங்கள் வசப்படுத்தினர்.

