உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீசின் கயானா மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. ஆட்டம் 8 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில் மழை தொடர்ந்து குறுக்கீடு செய்ததால், டோஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இறுதியாக இரவு 8.50க்கு டாஸ் போடப்பட்டது. டாஸை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
அரையிறுதியில் விளையாடும் இந்திய அணியின் 11 வீரர்கள்-
ரோகித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்து அணி-
பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர் – கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ரீஸ் டாப்லி
மழை மேலும் குறுக்கிட்டு இந்த போட்டி கைவிடப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் முதலிடம் பிடித்த அணி என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். முன்னதாக இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)