Last Updated:
பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற அமெரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயுப், சகிப்சதா பர்கான் ஆகியோர் களம் இறங்கினர். அயுப் 19 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த கேப்டன் சல்மான் அகா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த பாபர் ஆசம் – பர்கான் இணை அதிரடியாக ரன்கள் சேர்த்தது. இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பாபர் ஆசம் 46 ரன்களில் ஆட்டமிழக்க அரைச்சதம் கடந்த சகிப்சதா பர்கான் 73 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். அடுத்து வந்தவர்களில் சதாப் கான் 12 பந்துகளில் 30 ரன்கள் அதிரடியாக சேர்க்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அமெரிக்கா அணி களம் இறங்கியது. அந்த அணியில் சுபம் ரஞ்சானே 51 ரன்களும், ஷயான் ஜகாங்கிர் 49 ரன்களும், மிலிந்த் குமார் 29 ரன்களும் எடுத்தனர்.
இந்த தொடரில் முன்பு நெதர்லாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி தற்போது அமெரிக்காவையும் வென்றுள்ளது.
Feb 10, 2026 10:46 PM IST

