Last Updated:
இன்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் களம் இறங்கவுள்ளார்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான மேட்ச்சில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். இந்திய அணியை பொருத்தவரை பேட்டிங் வரிசை மிக பலமாக இருப்பதால், அனுபவம் இல்லாத அமெரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிக ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் களம் இறங்கவுள்ளார்.
இந்திய அணியில் இன்று விளையாடும் 11 வீரர்கள்- இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ரின்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
World Cup T20 : அமெரிக்காவுக்கு எதிரான மேட்ச்சில் இந்திய அணி பேட்டிங்.. ப்ளேயிங் 11 வீரர்கள் இவர்கள்தான்..


