Last Updated:
எனது கிரிக்கெட் கெரியரில் 300-க்கும் அதிகமான டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். கேப்டனாகவும் அணியில் 6-ஆவது வீரராக வரையும் நான் களமிறங்கி விளையாடி உள்ளேன்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள சஞ்சு சாம்சன் இறுதிப் போட்டி குறித்து உருக்கமான பேட்டி அளித்துள்ளார்.
இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. அகமதாபாத் ஆடுகளம் சிவப்பு மற்றும் கருப்பு மண் கலந்தது என்பதால், ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ‘பவுன்ஸ்’ மற்றும் வேகம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், இந்த மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாகவே இருந்து வருகிறது. இந்தத் தொடரில் இங்கு நடந்த முந்தைய போட்டியில் 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டிருப்பதால், இறுதிப் போட்டியிலும் ஒரு பெரிய ரன் ஸ்கோரை நாம் எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியைப் பொருத்தளவில் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போட்டி குறித்து அணியின் விக்கெட் கீப்பரும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன் கூறியதாவது-
இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் எல்லோரும் குழுவாக இணைந்து திறமையை வெளிப்படுத்தினார்கள். அதுவே வெற்றிக்கு முதல் காரணம். இந்தியாவுக்காக இறுதிப்போட்டியில் மிகப்பெரிய ஒரு இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். அதனை நான் கடமையாக நினைக்கிறேன்.
தொடர்ந்து பல ஆண்டுகளுக்காக இந்திய அணிக்காக மிக கடினமாக எனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறேன். முக்கியமான ஆட்டங்களில் அதிகமான பொறுமை, நேர்த்தியான ஆட்டம் உள்ளிட்டவை நமக்கு வெற்றியை கொடுக்கும். இந்த உலகக் கோப்பை தொடரில் அதனை நான் வெளிப்படுத்தியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேபோன்ற ஆட்டத்தை இறுதிப் போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டும். எனது கிரிக்கெட் கெரியரில் 300-க்கும் அதிகமான டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். கேப்டன் ஆகவும் அணியில் ஆறாவது வீரராக வரையும் நான் களமிறங்கி விளையாடி உள்ளேன்.


