Last Updated:
மேற்குவங்கத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதன்படி கடந்த 23ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், இன்று (29ஆம் தேதி) 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் வாக்குப் பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதிகள் தேவை.
மேற்குவங்கத்தில் கடந்த 23ஆம் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவில் 91.78% வாக்குகள் பதிவாகின. அதனைத் தொடர்ந்து இன்று (29ஆம் தேதி) நடந்த இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 89.99% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, PMARQ நடத்திய கருத்துக் கணிப்பின்படி திரிணாமுல் காங்கிரஸ் 118 முதல் 138 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 146 முதல் 161 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 முதல் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்பட்டுள்ளது.
ஜெ.வி.சி. நடத்திய கருத்துக் கணிப்பின்படி திரிணாமுல் காங்கிரஸ் 131 முதல் 152 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 138 முதல் 159 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மற்றவை 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்பட்டுள்ளது.
சாணக்கியா நடத்திய கருத்துக் கணிப்பின்படி திரிணாமுல் காங்கிரஸ் 130 முதல் 140 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 150 முதல் 160 தொகுதிகளிலும், மற்றவை 6 முதல் 10 தொகுதிகளிலும், காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என கணிக்கப்பட்டுள்ளது.
Peoples Pulse நடத்திய கருத்துக் கணிப்பின்படி திரிணாமுல் காங்கிரஸ் 177 முதல் 187 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 95 முதல் 110 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 முதல் 3 தொகுதிகளிலும், மற்றவை 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. மேற்குவங்கத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதிகள் தேவை எனும் சூழலில், மேட்ரீக்ஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின்படி திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 125 முதல் 140 தொகுதிகளும், பாஜக கூட்டணி 146 முதல் 161 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் எனவும் காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்க வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இதில் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 148 தொகுதிகளை தாண்டி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என சொல்லியுள்ளன. கடந்த 2021 தேர்தலில் பாஜக 77 இடங்களை வென்று எதிர்க்கட்சியாக இருந்தது. இந்நிலையில், இந்த முறை பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருப்பது கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.
Westbengal elections exit polls | மேற்குவங்கத்தில் ட்விஸ்ட்! ஆட்சியை பிடிக்கும் பாஜக… வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்


