சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (8.3.2024 முதல் 14.3.2024 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்
கேது, சுக்கிரன், சூரியன் நன்மை தருவர். திருவிக்ரமனை வழிபட அல்லல் விலகும்.
அசுவினி: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் ஆரோக்கியம் மேம்படும். வழக்கு வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பண நெருக்கடி குறையும். போட்டியாளர் உங்களை விட்டு விலகிச் செல்வர். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
பரணி: உங்கள் நட்சத்திரநாதன் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியனுடன் இணைவதால் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பொருளாதார நெருக்கடி விலகும். செயல்களில் இருந்த தடை அகலும். தொழில் தொடங்க நீங்கள் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் நட்சத்திரநாதன் சூரியபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தை விரிவு செய்வீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்குவரும். வெளி இட செல்வாக்கு உயரும்.
ரிஷபம்
புதன், சூரியன், ராகு நன்மைகளை வழங்குவர். மகாலட்சுமியை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: உங்கள் நட்சத்திரநாதன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் விருத்தியாகும். புதிய முயற்சிகள் பலிக்கும். செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசு விவகாரங்களில் உண்டான தடை விலகும்.
ரோகிணி: கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்னை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வருமானம் உயரும். வெளிநாட்டு தொடர்பு லாபம்தரும்.
மிருகசீரிடம் 1,2: ஜீவன சூரியன், லாப ராகுவால் உங்கள் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அந்நியரால் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.
மிதுனம்
சுக்கிரன், புதன், குரு நன்மைகளை வழங்குவர். ஆஞ்சநேயரை வழிபட அல்லல் தீரும்.
மிருகசீரிடம் 3, 4: லாப குருவால் வியாபாரம், தொழில் விருத்தியாகும். பத்தாமிட புதனால் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். வரவேண்டிய பணம் வசூலாகும். முயற்சி பலிக்கும். தொழிலில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
திருவாதிரை: பாக்கிய சனி அஸ்மனம் ஆகியிருந்தாலும் சுக்கிரன், புதன் குரு சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்கள் லாபமாகும். விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்ப்பு விலகும். முயற்சிக்கேற்ப லாபம் உண்டாகும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு அவசியம்.
புனர்பூசம் 1,2,3: தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன், ராகுவால் வெளிநாட்டு தொடர்பு ஆதாயமாகும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை அமையும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர். ஒரு சிலர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர். சனிக்கிழமை சில சங்கடம் தோன்றும்.
சந்திராஷ்டமம்:
6.3.2024 மாலை 4:07 மணி – 8.3.2024 இரவு 7:15 மணி
கடகம்
கேது நன்மைகளை வழங்குவார். விநாயகப் பெருமானை வணங்கி வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: முயற்சி ஸ்தான கேதுவால் உங்கள் செயல்கள் வெற்றியாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். தொழிலில் உண்டான தடைகள் நீங்கும். நிதி நிலை உயரும். சனிக்கிழமை செயல்களில் எச்சரிக்கை அவசியம்.
பூசம்: உங்கள் நட்சத்திரநாதன் எட்டாமிடத்தில் அஸ்தமனம் அடைந்திருப்பதால் இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உங்கள் புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் முயற்சிகள் பலிதமாகும். ஞாயிற்றுக்கிழமை புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.
ஆயில்யம்: கடந்தவார நெருக்கடி நீங்கும். உங்கள் செயல்கள் வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். கேது பகவானின் சஞ்சார நிலையால் எதிர்பார்ப்பு நிறைவேறும். திங்கள்கிழமை உங்கள் செயல்களில் கவனம் அவசியம்.
சந்திராஷ்டமம்:
8.3.2024 இரவு 7:16 மணி – 10.3.2024 இரவு 9:31 மணி
சிம்மம்
செவ்வாய், புதன், குரு நன்மைகளை வழங்குவர். சக்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மகம்: சனி பகவான் அஸ்தமனம் அடைந்திருப்பதால் சங்கடம் விலகும். பாக்கிய குருவின் பார்வைகளால் உங்கள் செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். செவ்வாய் புதனில் புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது.
பூரம்: பாக்கியாதிபதி செவ்வாயின் சஞ்சார நிலையால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் லாபம் உண்டாகும். செல்வாக்கு உயரும். வருமானத்தில் இருந்த தடை விலகும். அரசு வழியில் தோன்றிய நெருக்கடி நீங்கும். புதன் வியாழனில் விழிப்புணர்வு அவசியம்.
உத்திரம் 1: புதன், குரு, செவ்வாயின் சஞ்சார நிலைகளால் உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். செயல்களில் லாபம் ஏற்படும். வியாழன் அன்று சில சங்கடம் உண்டாகும். வேலைகளில் கவனம் அவசியம்.
சந்திராஷ்டமம்:
10.3.2024 இரவு 9:32 மணி – 13.3.2024 அதிகாலை 12:13 மணி
கன்னி
சூரியன் நன்மை வழங்குவார். நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செயல்கள் திருப்திகரமாக இருக்கும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
அஸ்தம்: ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் துணிச்சலுடன் செயல்படுவீர். நினைத்ததை சாதித்துக் கொள்ளும் வாரம் இது. உங்கள் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். இழுபறியாக இருந்த விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும்.
சித்திரை 1,2: அந்நியரால் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்போரின் செல்வாக்கு உயரும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.
சந்திராஷ்டமம்:
13.3.2024 அதிகாலை 12:14 மணி – 15.3.2024 அதிகாலை 3:52 மணி
துலாம்
சுக்கிரன், ராகு, புதன், குரு நன்மையை வழங்குவர். குலதெய்வத்தை வழிபட குறை நீங்கும்.
சித்திரை 3,4: ஐந்தாமிட சுக்கிரனால் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குரு பார்வையால் திருமண வயதினருக்கு வரன்வரும்.
சுவாதி: ஆறாமிட புதன், ராகுவால் அசாத்திய துணிச்சல் ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். பணவரவில் இருந்த தடை விலகும், முயற்சி பலிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்துசேரும்.
விசாகம் 1,2,3: உங்கள் உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர். முயற்சி வெற்றியாகும்.
விருச்சிகம்
செவ்வாய், கேது நன்மையை வழங்குவர். திருச்செந்தூர் வேலனை வழிபட சங்கடம் போகும்.
விசாகம் 4: குரு பகவானின் பார்வைகளால் தொழில் விருத்தியாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பணவரவு திருப்தி தரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
அனுஷம்: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ராசி நாதனால் முயற்சி ஆதாயமாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
கேட்டை: லாபஸ்தான கேது, மூன்றாமிட செவ்வாய், ஐந்தாமிட சுக்கிரனால் உங்கள் விருப்பம் நிறைவேறும். இதுவரையில் இருந்த சங்கடம் விலகும். முயற்சிகளில் லாப நிலை உண்டாகும். சனி பகவான் அஸ்தமனம் ஆகியிருப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
தனுசு
சுக்கிரன், சூரியன், புதன், குரு நன்மைகளை வழங்குவர். வீரட்டேஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மூலம்: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் சுக்கிரனால் உங்கள் ஆற்றல் வெளிப்படும். இதுவரையில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். செயல்களில் லாபம் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.
பூராடம்: உங்கள் நட்சத்திர நாதனும் ராசி நாதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். ஒரு சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உத்திராடம் 1: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கு உயரும். சங்கடம் விலகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். அரசு வழி செயல் லாபமாகும்.
மகரம்
சுக்கிரன், ராகு நன்மைகளை வழங்குவர். துர்க்கையை வழிபட துன்பம் விலகும்.
உத்திராடம் 2,3,4: தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் வரவு அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். வியாபாரம், தொழில் குறித்த சிந்தனை உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை ஏற்படும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்.
திருவோணம்: மூன்றாமிட ராகுவால் உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதாயம் உண்டாகும். பண சங்கடங்களில் இருந்து விடுபடுவீர். தொழிலில் உண்டான தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். சனி பகவான் அஸ்தமனம் அடைந்திருப்பதால் பாதிப்புகள் குறையும்.
அவிட்டம் 1,2: குரு பகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். மூன்றாமிட ராகுவால் முயற்சி வெற்றியாகும். உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
கும்பம்
சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவர். நவக்கிரக வழிபாடு நன்மைதரும்.
அவிட்டம் 3,4: உங்கள் ராசியாதிபதி சனி பகவான் அஸ்தமனம் அடைந்திருப்பதால் முன்பிருந்த சங்கடம் இல்லாமல் போகும். செலவிற்கேற்ற வருமானம் வரும். செயல்களில் நிதானம் அவசியம். அடுத்தவர்களை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.
சதயம்: உங்கள் நட்சத்திரநாதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதனின் ஆதரவால் ஒரு சிலர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். வீடு மனை வாசலை விருத்தி செய்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: ராசிக்குள் சஞ்சரிக்கும் சுக்கிரனாலும் குரு பகவானின் பார்வைகளாலும் உங்கள் சங்கடம் விலகும். போட்டியாளர்களை சமாளித்து வெற்றி அடைவீர். வருமானம் அதிகரிக்கும். உங்கள் செயல்கள் வெற்றியாகும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்.
மீனம்
குரு,செவ்வாய், சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். அர்த்தநாரீசுவரரை வணங்கி வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: கடந்த வாரத்தில் உண்டான சங்கடம் விலகி நிம்மதி அடைவீர். தன ஸ்தான குருவால் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அலுவலகப் பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உத்திரட்டாதி: சனி பகவான் அஸ்தமனம் அடைந்திருப்பதால் நெருக்கடி நீங்கும். பிரச்னை முடிவிற்கு வரும். லாப செவ்வாயால் வருமானம் உயரும். விருப்பம் நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.
ரேவதி: லாப செவ்வாய், பனிரெண்டாமிட சுக்கிரனால் உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். செயல் ஆதாயமாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன ஸ்தான குருவால் வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் செல்வநிலை உண்டாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்