Last Updated:
Wedding loan | திருமணக் கடனை வாங்கி, அதனை சரியான நேரத்தில் நீங்கள் திருப்பி செலுத்தும்போது, வலுவான கடன் வரலாற்றை உங்களால் அமைக்க முடியும்.
பல தம்பதியினர் தற்போது தங்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய நாளாக கருதப்படும் திருமணங்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வெட்டிங் லோன்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த லோன்கள் உங்களுடைய கனவுகளைப் பூர்த்தி செய்யும்விதமாக அமையப் பெற்றிருந்தாலும், இவை உண்மையில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதற்கான தாக்கம் என்பது நீங்கள் அந்த தனிநபர் கடனை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லது எதிர்மறையானதாகவும் இருக்கலாம்.
கிரெடிட் ஸ்கோர்கள் மீது வெட்டிங் லோன் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கம்:
- இந்த திருமணக் கடனை வாங்கி, அதனை சரியான நேரத்தில் நீங்கள் திருப்பி செலுத்தும்போது, வலுவான கடன் வரலாற்றை உங்களால் அமைக்க முடியும்.
- இதற்கு நீங்கள் ஆட்டோ-டெபிட் ஆப்ஷன்களைப் பயன்படுத்தலாம்.
- ஏற்கனவே உங்களிடம் கிரெடிட் கார்டுகள் இருந்தால் பர்சனல் லோன் வாங்குவதன் மூலமாக எல்லா வகையான கடன்களை நிர்வகிப்பதிலும் உங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தலாம்.
- முதலில் அதிக வட்டி கொண்ட கடன்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலமாக வட்டிக்கு ஆகும் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
- எப்பொழுதும் உணர்வுகளின் அடிப்படையில் கடன் வாங்கக்கூடாது. தேவை ஏற்பட்டால் மட்டுமே நீங்கள் கடன் வாங்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
அபாயங்கள் மற்றும் எதிர்மறையான விளைவுகள்:
- ஒவ்வொரு முறை நீங்கள் பர்சனல் லோன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது கடன் வழங்குனர்கள் அல்லது வங்கிகள் ஹார்ட் என்கொயரி செய்வது வழக்கம். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை தற்காலிகமாக குறைக்கலாம்.
- நீங்கள் ஒரு பெரிய பர்சனல் லோனை எடுக்கும்போது அது இயற்கையாகவே உங்களுடைய கடன் பொறுப்புகளை அதிகரிக்கும். எனவே, அதிக கடன் வருமான விகிதம் எப்பொழுதும் ஒரு நல்ல விஷயம் கிடையாது. இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு மோசமான சேதத்தை ஏற்படுத்தலாம்.
- கடன் வாங்கியவர் கடன் பேமென்ட்களை சரியான நேரத்தில் செலுத்தத் தவறினாலும் அதற்கான தாக்கம் என்பது அடுத்த 7 வருடங்களில் அவருடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் வெளிப்படும். அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் கடன் பெறுநர் இதனால் சட்டரீதியான விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம்.
உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு உதவும் சில புத்திசாலித்தனமான வழிகள்:
- ஒரு பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்பு முன்னணி பொருளாதார நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுகளில் கிடைக்கும் பர்சனல் லோன் EMI கால்குலேட்டர்களைப் பயன்படுத்தி எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
- டியூ தேதிகளை தவறவிடாமல் இருப்பதற்கு EMIகளை செலுத்த ஆட்டோ-டெபிட் ஆப்ஷன்களை எனேபிள் செய்து கொள்ளுங்கள்.
- ஒரு குறுகிய காலகட்டத்தில் அளவுக்கு அதிகமாக கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டாம்.
- CIBIL, CRIF, High Mark, Equifax மற்றும் Experian போன்ற கிரெடிட் பியூரியாக்கள் வழங்கும் கிரெடிட் ரிப்போர்ட்டுகளை கண்காணிப்பது அவசியம். இதில் ஏதேனும் தவறுகள் அல்லது பிழைகள் இருக்கிறதா என்பதை வழக்கமான முறையில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
- கடனை திருப்பி செலுத்திய பிறகும்கூட பொறுப்பாக நடந்துகொண்டு, அடுத்தடுத்த கடன் தேவைப்பட்டால் மட்டுமே அதனை வாங்க வேண்டும்.
- பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார ஆலோசகர்களுடன் உரையாடலாம்.
November 29, 2025 4:32 PM IST
Wedding loan | திருமணக் கடன் வாங்குவது கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா…? அபாயங்கள் மற்றும் எதிர்மறையான விளைவுகள்…


