இதனைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்தியா – ரஷ்யா உறவின் முக்கிய தூணாக எரிசக்தி பாதுகாப்பு உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, ரஷ்ய குடிமக்களுக்கு விரைவில், இலவசமாக 30 நாட்கள் சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்தார்.


