விராட் கோலியை பொறுத்தவரை குறையில்லாமல் விளையாடுகிறார். சதம் விளாசுகிறார். பீல்டிங் அருமையாக செய்கிறார். ஆனாலும், ஆர்சிபி தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்து வருகிறது. கடந்த ஐந்து போட்டிகளில், கோலி மூன்று அரை சதங்களுக்கு மேல் அடித்துள்ளார், அவற்றில் ஒன்றை சதமாக மாற்றினார், இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அந்த போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற முடிந்தது. சனிக்கிழமையன்று, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் எடுத்த கோலி, ஐபிஎல் 2024 இல் தனது அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்ததைப் பார்த்தபோது மிகவும் உடைந்து போனார்.